சாலையில் பூசணி உடைக்க வேண்டாம் என விடியல் அமைப்பினர் கோரிக்கை
குமாரபாளையம் சாலையில் பூசணி உடைக்க வேண்டாம் என விடியல் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்;
. ஆயுதபூஜையையொட்டி ஒவ்வொரு வியாபார நிறுவனத்தாரும் பூஜை போட்டு, திருஷ்டி கழிக்க பூசணியை சாலையில் போட்டு உடைப்பது வழக்கம். இதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்துக்கு ஆளாகி பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை தவிர்க்கும் பொருட்டு, சாலையில் பூசணியை உடைக்க வேண்டாம் என, விடியல் ஆரம்பம் அமைப்பின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். அமைப்பாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். சேலம் சாலை, இடைப்பாடி சாலை, ஆனங்கூர் சாலை, பள்ளிபாளையம் சாலை உளிட்ட முக்கிய சாலைகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. நிர்வாகிகள் தீனா, சண்முகம், உள்பட பலர் பங்கேற்றனர்.