புதுகை: பைக்கிலிருந்து தவறி விழுந்தவர் துடிதுடித்து பலி
விபத்து செய்திகள்;
புதுக்கோட்டை மாவட்டம் வடவாளத்திலிருந்து காயாம்பட்டிக்கு மணிகண்டன் (29) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது காயம்பட்டி கிளை சாலையில் பைக்கிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி கோகிலா (29) அளித்த புகாரில் செம்பட்டி விடுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.