காந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டம் வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசு பங்கேற்பு

குமாரபாளையத்தில் நடந்த காந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில்   வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசு பங்கேற்றார்.;

Update: 2025-10-02 14:35 GMT
குமாரபாளையம் மகாத்மா காந்தி சமூக சேவை மையம் சார்பில் 157வது காந்தி ஜெயந்தி விழா அதன் தலைவர் நாச்சிமுத்து தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக வீரபாண்டிய கட்டபொம்மன் குடும்ப 5வது தலைமுறை வாரிசு துரைக்கண்ணம்மாள், ஈரோடு தனியார் கல்லூரி பேராசிரியை ஷர்மிளா பங்கேற்று வாழ்த்தி பேசினர். துரைக்கண்ணம்மாள் பேசியதாவது; வீரபாண்டிய கட்டபொம்மன் சிறந்த வீரர், இந்திய நாட்டின் மீது மிகவும் பற்றுக்கொண்டவர் என்பது யாவரும் அறிந்தது. அவர் ஆன்மீக நட்டம் அதிகம் உள்ளவர். திருசெந்தூர் கோவிலில் பூஜை முடிந்த பின்தான் உணவு அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தவர். அதற்காக, திருச்செந்தூர் கோவிலில் இருந்து பாஞ்சலங்குறிச்சி வரை, குறிப்பிட்ட இடைவெளியில் பெரிய அளவிலான மணிகூண்டு அமைத்தார். கோவிலில் போசை முடித்தால் முதல் மணி ஒலிக்கும். அதையடுத்து ஒவ்வொரு மணியாக ஒலிக்க செய்வார்கள். அந்த மணி ஓசை கேட்ட பின்தான் உணவு உண்பார். மன்னர்  பரம்பரை என்று எங்கள் மூதாதையர் தங்கள் பிள்ளைகளை ஒரு சில தலைமுறைகள் படிக்க வைக்கவில்லை. எனக்கு முந்தைய தலைமுறையில்தான் கல்வி கற்க தொடங்கினர். நான் பி.எஸ்.சி. அக்ரி, படித்து, அருப்புகோட்டை, வேளாண்மை துணை இயக்குனராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்று உள்ளேன். சட்டத்திற்கு மீறி நான் செயல்பட்டது இல்லை. ஒவ்வொரு அரசு அதிகாரியும், அரசு ஊழியரும் நேர்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேற்றத்துடன் புகழும் பெறும். இவ்வாறு அவர் பேசினார்.   ஜே கே கே முனி ராஜா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்து காந்தி படத்தைத் திறந்து வைத்து மாலை அணிவித்தார். மகளிர் குழு செயலாளர் விஜயலட்சுமி குத்துவிளக்கு ஏற்றினார். சேலம் புவியியலாளர்  தங்கராஜு பெரியசாமி வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த காளியண்ணன்,குணா,ஈஸ்வரி ஆகிய மாணவர்களுக்குப் பரிசு வழங்கினார்.பேராசிரியர் ஈரோடு சர்மிளா குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமான கதைகளைக் கூறினார். குழந்தைகள் மிகுந்த ஆர்வத்தோடு கதைகளைக் கேட்டு மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் தமிழ் பேராசிரியர் சங்கரராமன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அய்யாசாமி வேமங்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் மாதேசு, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் விஜய சாமுண்டீஸ்வரி சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் நல சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் , எக்ஸெல் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் செங்கோட்டையன் உள்பட பலர் பம்கேற்றனர். ரவி,செந்தில் ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தனர்.ஈஸ்வரன் நன்றி கூறினார். விழா  முடிவில் ஆயிரம் பேருக்கு அன்னதானமும்,கராத்தே சாகச நிகழ்வும், சென்னை ஆண்டவர் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. .

Similar News