போச்சம்பள்ளி அருகே வரதராஜப்பெருமாள்கோவில் நவராத்திரி விழா.
போச்சம்பள்ளி அருகே வரதராஜப்பெருமாள்கோவில் நவராத்திரி விழா.;
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி அடுத்த பாரூர் வரதராஜப்பெருமாள் கோவிலில் நேற்று நவராத்திரி 10-ம் நாளை முன்னிட்டு வரதராஜப்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.