புதுகை அருகே புதுமாப்பிள்ளை தற்கொலை

துயரச் செய்திகள்;

Update: 2025-10-03 03:05 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ரெகுநாதபுரம் அடுத்த உலாவயலை சேர்ந்தவர் தேவேந்திரன் (30). இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரது மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நேற்று (அக்.2) உலாவயலில் உள்ள அவரது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரில் ரெகுநாதபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News