புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பல நூறு ஆண்டு பழமை வாய்ந்த தெய்வங்களாக சேத்துமேல் அய்யனார் ஆலயம் முத்து பாலான்டார் ஆலயம் மாரியம்மன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் வடகல தென்கல பெருமாள் ஆலயம் என ஏழு ஆலயங்கள் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக திகழ்கிறது இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் ஏழு சுவாமிகளும் வீதி உலா சென்று அப்பகுதியில் உள்ள மகர் நோம்பு அம்பு திடலில் அம்புவிடும் நிகழ்வு நடைபெற்று வருவது வழக்கம் இதே போல் இன்று விஜயதசமி அன்று ஏழு ஆலய தெய்வங்களான சேத்துமேல் அய்யனார் முத்துபாலடையார் மாரியம்மன் மீனாட்சிசுந்தரேஸ்வரர் வடகல தென்கல பெருமாள் ஆகிய ஏழு தெய்வங்கள் மேளதாளங்களுடன் வீதி உலா புறப்பாடு செய்து அம்புவிடும் நிகழ்வு நடைபெற்றது இதில் அரிமளம் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது