வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் திடீரென பெய்த கனமழை..
வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் திடீரென பெய்த கனமழை..;
வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் திடீரென பெய்த கனமழை.. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி. தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் காலையிலிருந்து வெயிலினுடைய தாக்கம் அதிகரித்து காணப்பட்டது திடீரென கருமேகங்கள் சூழ்ந்து வாணியம்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளான நியூடவுன், செட்டியபனூர், பெருமாள்பேட்டை, நேதாஜி நகர், ஜனதாபுரம், பெரியபேட்டை, பஜார் வீதி, கச்சேரி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து இந்த மழையானது ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் மழைநீருடன் கழிவு நீர் கலந்து வாணியம்பாடி நியூடவுன் சாலைகளில் ஆறாக ஓடியது இதனால் அவ்ழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.. மேலும் வாணியம்பாடியில் திடீரென காற்றுடன் பெய்த கனமழையால் குளிர்ச்சியான காற்று வீசியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.