சுதந்திர போராட்ட வீரர் பிறந்தநாள் கொண்டாட்டம்

தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 142-வது பிறந்த நாளை திருவுருவ படத்திற்கு கலெக்டர் சதீஸ், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்;

Update: 2025-10-04 11:10 GMT
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி, ஒண்ணப்பகவுண்டன அள்ளி ஊராட்சியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில் விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா 142-வது பிறந்த நாள் விழா இன்று மதியம் 12 மணியளவில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்து அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா திருவுருவ படத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ், மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி ஆகியோர் இன்று மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதனை தொடர்ந்து, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Similar News