ராசிபுரம் பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற பக்தர்கள் மீது மாடு தாண்டும் திருவிழா...
ராசிபுரம் பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற பக்தர்கள் மீது மாடு தாண்டும் திருவிழா...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெறுவதும் புரட்டாசி 3வது சனிக்கிழமை முன்னிட்டு மாடு தாண்டும் விழாவானது நடைபெறுவது வழக்கம் .. இந்த நிலையில் பெருமாளை குலதெய்வமாக கொண்ட பக்தர்கள் சேலம் கொங்கணாபுரம், சின்ன திருப்பதியில் இருந்து மாட்டை அழைத்துக் கொண்டு ராசிபுரம் எல்லை பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு வருகை புரிந்து,அங்கிருந்து சக்தி அழைத்து நகரின் முக்கிய பகுதிகளில் வழியாக மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தனர். பின்னர் கோவிலின் முன்பு பக்தர்கள் மீது மாடு தாண்டும் வழிபாடு நிகழ்ச்சியானது வெகு விமர்சையாக நடைபெற்றது. மாடு அழைத்து வரும் வழியில் ஆண்,பெண், குழந்தைகள், பக்தர்கள் அனைவரும் தரையில் படுத்து கொள்வார்கள், படுத்திருந்த பக்தர்களை மாடு தாண்டி செல்லும்போது அதன் கால் பக்தர்கள் மேல் படாமல் சென்றால் நினைத்தது நடக்கும் என்பதாகவும், கால் பட்டுவிட்டாலோ அல்லது தாண்டாமல் சென்றுவிட்டாலோ பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறாது என்பது நீண்டகால ஐதீகமாக இருந்து வருகிறது. நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் அருள் பெற்று சென்றனர்..