தென்கரைக்கோட்டையில் கொட்டி தீர்த்த கனமழை
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தென்கரைக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இடைவிடாத கனமழை;
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தென்கரைக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது இந்த நிலையில் நேற்று இரவு முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை காலை வரை விடாமல் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பொழிந்தது இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவுகிறது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்