பென்னாகரத்தில் கொட்டி தீர்த்த கனமழை
பென்னாகரம் சுற்றுவட்டாரத்தில் இடைவிடாமல் விடிய விடிய கொட்டிய கனமழை;
தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பென்னாகரம், பாப்பாரப்பட்டி, நாகமரை, நாகதாசம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இன்று திங்கட்கிழமை விடியற்காலை வரை கனமழை கொட்டி தீர்த்து வருகிறது இதனால் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.