ஆனந்த் நடராஜருக்கு புரட்டாசி மாத சதுர்த்தி திதி

குமாரசாமிப்பேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆனந்த நடராஜருக்கு புரட்டாசி மாத சதுர்த்தி திதி வழிபாடு;

Update: 2025-10-06 01:46 GMT
தர்மபுரி குமாரசாமிபேட்டையில் எழுந்தருளி உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ள அருள்தரும் அன்னை ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ மத் ஆனந்த நடராஜர் சபையில் ஆண்டுகளுக்கு ஆறு அபிஷேகம் காணும் பெருமானுக்கு இந்த புரட்டாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி திதியில் திருமஞ்சனம் நடைபெறும் அதன்படி நேற்று மாலை 5.30 மணியளவில் மங்கல இசையுடன் விக்னேஸ்வர பூஜை,கலச ஸ்தாபனம், சங்கல்பம் பின்னர் சபையின் முகப்பு மண்டபத்தில் ஆனந்த நடராஜ பெருமானுக்கு 16 வகை சுத்த சுகந்த பரிமள திரவியங்கள்,பழங்கள், கொண்டு மஹா அபிஷேகம் (புஷ்பாஞ்சலியுடன்) அதனைத்தொடர்ந்து அலங்காரம் சோடச உபசாரம் வேதபாராயணம் பஞ்ச புராண பாராயணம்,மஹா தீபாராதனை வெகு சிறப்பாக நடைபெற்றது.

Similar News