கஞ்சா போதையில் போதையில் வந்து இரு சக்கர வாகனத்தில் கீழே விழுந்த போதை ஆசாமி தூக்கி விட்ட போக்குவரத்து காவலர்மீது தாக்குதல். போலீசை தாக்கியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியில் கஞ்சா போதையில் இருசக்கர மோட்டார் சைக்கிளில் வந்து கீழே விழுந்தவரை தூக்கி விட சென்ற அந்தப் பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து முதல்நிலை காவலர் கந்தசாமியை தாக்கிய போதை ஆசாமி ஹரிகரன் 24 மீதுவழக்கு பதிவு கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்;
திருச்செங்கோடு வாலரைகேட் நால்ரோடு பகுதியில் திருச்செங்கோடு நகர காவல் நிலைய போக்குவரத்து காவல்துறை முதல் நிலைக் காவலர் கந்தசாமி பணியில் இருந்தார் அப்போது இருசக்கர வாகனத்தில் கொக்கராயன் பேட்டை ரோட்டில் இருந்து தள்ளாடிபடியே வந்த ஒரு வாலிபர் சென்டர் மீடியனில் மோதி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்ட போக்குவரத்து முதல் நிலை காவலர் கந்தசாமி கீழே விழுந்தவரை தூக்கிவிட சென்று தூக்க முயற்சித்த போது கீழே விழுந்து கிடந்த அந்த போதை ஆசாமி எழுந்து போக்குவரத்து காவலரை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கியதோடு தொடர்ந்து துரத்தி தாக்கவும் முயற்சித்து உள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் போக்குவரத்து காவலருக்கு ஆதரவாக அந்த போதை ஆசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்து பிடித்து வைத்துள்ளனர். தகவல் அறிந்த மற்ற போக்குவரத்து காவலர்கள் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் இருந்து போதை ஆசாமியை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நடந்த பரிசோதனைகள் அந்த நபர் கஞ்சா போதையில்இருந்தது தெரியவந்தது. மேலும் இருசக்கர வாகனத்தில் வந்து போக்குவரத்து காவலரை தாக்க முயற்சித்த அந்த நபர் குறித்து நகர போலீசார் தீவிரமாக விசாரித்ததில் அவர் பெயர் ஹரிகரன் வயது 24 மதுரை கொட்டாம்பட்டி பகுதியை பூர்வீகமாக கொண்ட செந்தில் குமார் என்பவரது மகன். இவர் சில காலம் திருச்செங்கோடு சாணார்பாளையம் பகுதியில் வசித்து வந்ததும், தற்போது விட்டம்பாளையம் பிலிக்கல் மேடு பகுதியில் வசித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. இவர் பந்தல் போடும் வேலை பார்த்து வருகிறார். அதிகமான கஞ்சா போதையில் கொக்கராயன் பேட்டை ரோட்டில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து கீழே விழுந்துள்ளார். அவரை தூக்கி விட முயற்சித்த போது தான் போக்குவரத்து முதல் நிலை காவலர் கந்தசாமியை அவர் தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது இதனை அடுத்து ஹரிஹரன் மீது வழக்கு பதிவு செய்த திருச்செங்கோடு நகர போலீசார் ஹரிஹரனை கைது செய்து திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் அங்கு நீதிபதி அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஹரிகரன் சிறையில் அடைக்கப்பட்டார்.