கூட்டுறவு பணியாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம்
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் தருமபுரி மாவட்ட கிளை சார்பாக 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்;
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் தருமபுரி மாவட்ட கிளை சார்பாக 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். இன்று திங்கட்கிழமை தர்மபுரி கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு நடைபெற்றது இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் & நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் சங்க பணியாளர்கள், நகை மதிப்பீட்டாளர்கள், பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் சந்தித்து வரும் பல்வேறு இடர்பாடுகளை களைவது தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் விநாயகம், சின்னபையன் மாவட்ட இணைசெயலாளர்கள் கோவிந்தராசு, துரைராஜ் மாவட்ட போராட்ட குழு தலைவர் ஸ்டாலின், மணிக்குமா,ர் மாவட்ட போராட்டகுழு செயலாளர ராம்ராஜ் ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் சங்க பணியாளர்கள், நியாயவிலைக்கடை பணியாளர்கள், நகை மதிப்பீட்டாளர்கள், கணினி பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்க மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.