மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்;
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது இதில் பொதுமக்கள் பல்வேறு விதமான கோரிக்கைகள், மற்றும் உதவி தொகைகள் வேண்டி 417 மனுக்கள் அளித்தனர் தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் சதீஷ் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா உட்பட துறை சார்ந்த அரசு முதன்மை அலுவலர்கள் பங்கேற்றனர்.