காரிமங்கலத்தில் கால்நடைகள் விற்பனை ஜோர்
காரிமங்கலம் செவ்வாய் வார சந்தையில் 83 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை;
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வியாபாரிகள் கால்நடைகளை விற்க வாங்க வந்திருந்தனர். நேற்று ஆடுகள் ரூ.3500 முதல் ரூ.25,000 வரை என 30 லட்சத்திற்கும், மாடுகள் ரகத்தை பொறுத்து ரூ.5,500 முதல் ரூ.40,000 என 50 லட்சத்திற்கும், நாட்டுக்கோழிகள் 3 லட்சத்திற்கும் என 83 லட்சத்திற்கு கால்நடைகள் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.