உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விதமாக ராசிபுரத்தில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் சைக்கிளில் பயணம்...

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விதமாக ராசிபுரத்தில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் சைக்கிளில் பயணம்...;

Update: 2025-10-08 16:13 GMT
உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விதமாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் சைக்கிளில் பயணம் மேற்கொண்டார். பயணம் ஆனது சட்டமன்ற அலுவலகத்தில் இருந்து தொடங்கி புதுப்பாளையம் சாலை,பழைய பேருந்து நிலையம்,சேலம் சாலை, புதிய பேருந்து நிலையம், ஆத்தூர் சாலை, பட்டணம் சாலை உள்ளிட்ட வழியாக சென்று சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு தனது இல்லத்தை சென்றடைந்தார். சைக்கிளில் பயணம் மேற்கொண்டவாறு பொதுமக்களுக்கு கை அசைத்து சென்றார்.உடன் நகர கழக செயலாளர் என்.ஆர். சங்கர் உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டனர்...

Similar News