அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் நிர்வாகிகள் கொண்டாட்டம்...

அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் நிர்வாகிகள் கொண்டாட்டம்...;

Update: 2025-10-09 15:52 GMT
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வியாழக்கிழமை அன்று நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் பாட்டாளி மாணவர் சங்கம் சார்பாக இராசிபுரம் தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டும் பிறகு இராசிபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள்,பேனா பென்சில்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில மாணவர் சங்க செயலாளர் பாலு தலைமை தாங்கினார். மாவட்ட மாணவர் சங்க செயலாளர் குமரவேல் முன்னிலை வகித்தார். மேலும் பிரதீப்,மாதேஷ், நாகவேல்,கோகுல், குருராம், கண்ணன்,ராஜசேகர்,மோனிஷ்,பிரவீன் குமார், நிர்மல்,லோகநாதன் உள்ளிட்ட மாணவர் சங்க பொறுப்பாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News