கிராமங்கள் தோறும் தமிழக முதல்வரின் காணொளி காட்சி மூலம் கிராம சபை கூட்டம் தொடங்கி வைக்கப்பட்டது..

கிராமங்கள் தோறும் தமிழக முதல்வரின் காணொளி காட்சி மூலம் கிராம சபை கூட்டம் தொடங்கி வைக்கப்பட்டது..;

Update: 2025-10-11 14:26 GMT
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்களபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே தமிழக முதல்வரின் கிராமங்கள் தோறும் கிராம சபை கூட்டம் காணொளி காட்சி தொடங்கி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் கலந்து கொண்டு கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். மேலும் பொது மக்கள் இடத்தில் மனுக்களை பெற்று கடந்த தமிழக அரசின் நலத்திட்டங்கள், தமிழக முதல்வரின் பல்வேறு சிறப்பு மிகு திட்டங்கள் குறித்தும் பொதுமக்களிடத்தில் எடுத்து கூறினார். தொடர்ந்து இந்த அரசு மக்களுக்காக பல்வேறு அரசு நலத் திட்டங்களை வழங்கி வருகிறது அதனை பொதுமக்கள் பயன்படுத்தி நீங்கள் சிறப்பாக வாழ்க்கை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஒன்றிய கழகச் செயலாளருமான கே.பி. ராமசாமி, திட்ட இயக்குனர் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம ஊராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News