நம்மவர் தொழிற்சங்க பேரவை மாநில செயற்குழு கூட்டம்..

நம்மவர் தொழிற்சங்க பேரவை மாநில செயற்குழு கூட்டம்...;

Update: 2025-10-11 16:09 GMT
மக்கள் நீதி மய்யத்தின் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில செயற்குழு கூட்டம் அண்மையில் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் லோகோ பொறித்த துண்டை நம்மவர்" தலைவரும், மக்களவை உறுப்பினருமான "கமல்ஹாசன்" அவர்கள் அறிமுகப்படுத்தி அனைவருக்கும் வழங்கினார். இதில் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சொக்கர் பெற்றுக்கொண்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கினார். நம்மவர் துணை ஒருங்கிணைப்பாளர் ஜிம் மாடசாமி, செயலாளர் ரவிச்சந்திரன், துணைச் செயலாளர் A. ராஜு, துணை ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், ரவி, மாநில பொருளாளர் பானுமதி, துணை ஒருங்கிணைப்பாளர் P.S. சரவணன், சங்கீதா,சாந்தி, பாண்டிச்சேரி பானுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நவம்பர் மாதம் மதுரையில் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாநிலத் துணைச் செயலர் ராசிபுரம் A. ராஜு நன்றி கூறினார்..

Similar News