ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாத பண்டிகை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் பூஜை..
ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாத பண்டிகை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் பூஜை..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐப்பசி மாத மாரியம்மன் பண்டிகை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு முகூர்த்த கால் கோயில் முன்பு நடப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இதில் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், கோவில் பூசாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.