பங்களா பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றவர் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து-
பங்களா பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றவர் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து-;
பங்களா பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றவர் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து- கரூர் மாவட்டம் சின்னதாதாராபுரம் காவல் எல்லைக்குட்பட்ட சூடாமணி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் வயது 50. இவர் புதன்கிழமை அன்று காலை 5:30- மணி அளவில் கரூர் சின்னதாராபுரம் சாலையில் பங்களா பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் கரூர் சின்ன தாராபுரம் மலச்சியூர் பகுதியைச் சேர்ந்த பவுன்ராஜ் வயது 55 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் நடந்து சென்ற தங்கவேல் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தங்கவேல் மற்றும் பவுன்ராஜ் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்டு தங்கவேலுவை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும்,பவுன்ராஜை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த தங்கவேல் சகோதரர் சுப்பிரமணி வயது 55 என்பவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட சின்ன தாராபுரம் காவல் துறையினர் டூவீலரில் வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.