திருச்செங்கோட்டில் ஆதரவற்றோருக்கான ஆனந்த தீபாவளி முடி திருத்தி புத்தாடை வழங்கி மகிழ்வித்த நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு

திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு சார்பில் நகரம் மற்றும்சுற்று வட்டாரத்தில் உள்ள கோவில் பகுதிகளில் யாசகம் எடுப்பவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு  தீபாவளியை முன்னிட்டு ஆண்களுக்கு முடி வெட்டி,முக சவரம் செய்து புதிய ஆடைகள் பெண்களுக்கு புடவை வழங்கப்பட்டது;

Update: 2025-10-17 12:34 GMT
திருச்செங்கோடு நகர்மன்ற தலைவராக இருப்பவர் நளினி சுரேஷ் பாபு இவரது கணவர் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவராக உள்ளார்.இவர்கள் சமூக சேவை செய்வதற்காக நளினி சுரேஷ்பாபு என்ற அறக்கட்டளை ஒன்றை தொடங்கி நடத்தி வருகின்றனர் அதில் இன்று தீபாவளி பண்ட ஒட்டி பலரும் பல்வேறு இனிப்புகள் சாப்பிட்டு புத்தாடைகள் அணிந்து மகிழ்வாக இருக்கும் சூழ்நிலையில் ஆதரவற்றவர்கள் கோவில் வாசலில் யாசகம் பெறுபவர்கள் முடி வெட்டாமல் முகச்சவரம் செய்யாமல் தாடியுடன்இருப்பதையும் பெண்கள் புத்தாடை அணியாமல் கிலிசல் ஆடைகள் அணிந்து இருப்பதையும் பார்த்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனநோக்கில் கோவில் வாசலில் யாசகம் வருபவர்கள் ஆதரவற்றவர்கள் என60 பேரை40 கால் மண்டபம் அருகே உள்ள நாலு கால் மண்டபத்தின் வாசலுக்கு அழைத்து வந்து நகரில் உள்ள முடி வெட்டும் தொழிலாளர்கள் நாகராஜ் கோகுல்உள்ளிட்ட நான்கு முடி வெட்டும் தொழிலாளர்களைக் கொண்டு ஆண்களுக்கு முடி வெட்டியும் முகச்சவரம் செய்தும் குளிக்க ஷாம்பு பல் துலக்க பேஸ்ட் பிரஸ் கொடுத்து குளித்தபின் புத்தாடை கொடுத்து ,பண்டிகை செலவுக்கு பணம் கொடுத்து காலை உணவு கொடுத்தனர். இதேபோல் பெண்களுக்குகுளிக்க ஷாம்பு பேஸ்ட் பிரஸ் புடவை கைச் அளவுக்கு பணம்,காலை உணவு ஆகியவை வழங்கினார்கள் பண்டிகை தினத்தில் அழுக்கு உடையுடன் மற்றவர்களை பார்த்து ஏக்கத்துடன் இருந்த நிலையில் எங்களை புத்தாடை அணிவித்து புது மனிதர்களாக மாற்றி இருக்கிற நகர்மன்ற தலைவர்நளினி சுரேஷ் பாபுவிற்கும் அவரது கணவர் சுரேஷ்பாபுவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஆதரவற்றவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Similar News