தீபாவளி பண்டிகை முன்னிட்டு ராசிபுரம் கடைவீதி பகுதியில் கூட்டம் களைகட்ட துவங்கியது...
தீபாவளி பண்டிகை முன்னிட்டு ராசிபுரம் கடைவீதி பகுதியில் கூட்டம் களைகட்ட துவங்கியது...;
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் திங்கள்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளன. இதனை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பெரிய கடை சின்ன கடை வீதி பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட துணிக்கடைகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட இனிப்பு கடைகளில் பொதுமக்கள் கூட்டம் களைகட்ட துவங்கியது. கடந்த சில நாட்களாக தீபாவளி பண்டிகை என்பதே தெரியாத நிலையில் தற்போது ராசிபுரம் கடை வீதி பகுதியில் தற்போது அதிக அளவில் கூட்டம் களைகட்டி வருகிறது. இதனால் ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது..