மணவாடி அருகே பழுதடைந்த டூவீலரை பழுது பார்க்கும் போது வேகமாக வந்த மற்றொரு டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
மணவாடி அருகே பழுதடைந்த டூவீலரை பழுது பார்க்கும் போது வேகமாக வந்த மற்றொரு டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.;
மணவாடி அருகே பழுதடைந்த டூவீலரை பழுது பார்க்கும் போது வேகமாக வந்த மற்றொரு டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் எல்ஜி பி நகரை சேர்ந்தவர் கலைமணி வயது 38. இவர் திங்கட்கிழமை காலை 9 மணி அளவில் கரூர் - பாளையம் சாலையில் உள்ள மணவாடி பாரத் பெட்ரோல் பங்க் அருகே பழுதடைந்த தனது டூவீலரை நிறுத்தி பழுது நீக்கி கொண்டு இருந்தார். அப்போது கரூர் டி. செல்லாண்ட்டி பாளையம் 5வது கிராஸ் அம்மன் நகரை சேர்ந்த பெருமாள் வயது 42 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கலைமணியை எ கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர், இந்த சம்பவம் குறித்து கலைமணி அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட வெள்ளியனை காவல்துறையினர் விபத்து ஏற்படும் வகையில் டூ வீலரை ஓட்டிய பெருமாள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.