மழைக்காலம் தொடங்கியுள்ளதை அடுத்து திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள காரணத்தால் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தலைமையில் தீவிர டெங்கு ஒழிப்பு பணி தொடக்கம் 25 வது வார்டு வட்டப்பாறை பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது புகை மருந்து அடிக்கப்பட்டது;

Update: 2025-10-22 06:48 GMT
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் விட்டுவிட்டு கனமான மற்றும் மிதமான தூரல் மழை பெய்து கொண்டே இருப்பதால் மழைநீர் தேங்கினால் டெங்கு கொசுக்கள் வளரும் என்கிற அபாய நிலை இருப்பதால் திருச்செங்கோடு நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சார நிகழ்ச்சி நகரில் உள்ள 33 வார்டுகளிலும் நடத்தப்பட்டது துவக்கமாக 25 வது வார்டு வட்டப்பாரை பகுதியில் வீடு வீடாகச் சென்று திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நகர துப்புரவு அலுவலர் சோழராஜ் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று தண்ணீர் வைத்துள்ள தொட்டிகளில் கொசு புழுக்கள் இருக்கிறதா என பார்த்தும் அவ்வாறு இருந்தால் அதை கவனித்து விட்டு தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்கும் படியும் மூடி இல்லாத தொட்டிகளாக இருந்தால் துணிகளால்  கட்டி வைக்கும்படியும்அறிவுறுத்தப்பட்டது மேலும்கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு வாசிக்க பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர் தொடர்ந்து  பல்வேறு பகுதிகளிலும்புகை மருந்து அடிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும் என்றால் கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும் டெங்கு கொசு ஒரு முறை நான் ஒரு முட்டைகளை இடும் நமது வீட்டில் தூய்மையாக வைத்திருப்பதைப் போல் அனைவரும் தூய்மையாக வைத்திருந்தால் தான் டெங்கு கொசு பரவலை தடுக்க முடியும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும் என்றால் 100% பொதுமக்களுடைய ஒத்துழைப்பு வேண்டும் என பொதுமக்களிடம் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு விளக்கி கூறினார் நிகழ்ச்சியில் 25வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் புவனேஸ்வரி உலகநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

Similar News