காமாட்சிபுரத்தில் நடு தண்டில் குலை தள்ளிய அதிசய வாழைமரம்
நிலக்கோட்டை அருகே காமாட்சிபுரத்தில் நடு தண்டில் குலை தள்ளிய அதிசய வாழைமரம்;
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் அறிவழகன் பூ விவசாயம் செய்து வருகிறார் இவர் பூந்தோட்டம் அருகே சிறிய அளவிலான இடத்தில் வாழை மரங்களை வளர்த்து வருகிறார் இந்நிலையில் நன்கு வளர்ந்த வாழைகள் குலை விடும் பருவத்தில் இருக்கும் நிலையில் அதில் ஒரு ரஸ்தாலி வாழை மரத்தில் நடு தண்டிலிருந்து குலை விட்டு வாழைத்தார் வெளியே வந்துள்ளது வாழை மரத்தின் நுனிப்பகுதியில் வரவேண்டிய வாழைத்தார் குலை மரத்தின் நடுப்பகுதியில் வெளிப்பட்டதால் இது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது நடுமரத்தில் நன்கு வளர்ந்து வரும் வாழைத்தாரை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.