பன்றி இறைச்சி கடை வைப்பதில் தகராறு - வாலிபருக்கு அரிவாள் வெட்டு
வேடசந்தூர் அருகே பன்றி இறைச்சி கடை வைப்பதில் தகராறு - வாலிபருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு;
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஐயப்பா நகரை சேர்ந்த ஜீவா(30), நாகம்பட்டி குடகனாறு ஓரப்பகுதியில் பன்றிகளை வளர்த்து வரும் இவர் பன்றி கறிக்கடையும் நடத்தி வருகிறார். மாரம்பாடியில் பன்றி கறிக்கடை போடுவதில் இவருக்கும் தாடிக்கொம்பை சேர்ந்த மூனீஸ்வரன்(31 )-க்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த மூனீஸ்வரன் சிலருடன் சேர்ந்து ஜீவாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். படுகாயம் அடைந்த ஜீவா சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி. மேற்படி சம்பவம் குறித்து வேடசந்துார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.