திருக்காம்புலியூர் அருகே டூவீலரில் சென்ற கணவன் மனைவி மீது அடையாளம் தெரியாத கார் மோதி விபத்து.

திருக்காம்புலியூர் அருகே டூவீலரில் சென்ற கணவன் மனைவி மீது அடையாளம் தெரியாத கார் மோதி விபத்து.;

Update: 2025-10-22 13:10 GMT
திருக்காம்புலியூர் அருகே டூவீலரில் சென்ற கணவன் மனைவி மீது அடையாளம் தெரியாத கார் மோதி விபத்து. கரூர் மேலப்பாளையம் அருகே மூலக்காட்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் வயது 31. இவரது மனைவி ஆர்த்தி வயது 27. இவர்கள் இருவரும் அக்டோபர் 15ஆம் தேதி இரவு 7:10 மணியளவில் திருச்சி -கரூர் சாலையில் டூவீலரில் திருக்காம்புலியூர் விசாலாட்சி ஹோட்டல் அருகே சென்றபோது அதே சாலையில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று சார்லஸ் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது, இந்த சம்பவத்தில் வாகனத்துடன் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கணவன் மனைவி இருவரும் கீழே விழுந்தனர். இதில் கணவனுக்கு லேசான காயமும் மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக மனைவி ஆர்த்தியை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர், இந்த சம்பவம் தொடர்பாக சார்லஸ் அளித்த புகாரில் 6- நாட்கள் கழித்து நேற்று மாயனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News