இளைஞர் கத்தியால் குத்தி கொலை இருவர் கைது போலீசார் விசாரணை
பண்ணைக்காடு பகுதியில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை இருவர் கைது போலீசார் விசாரணை;
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை கிராமமான பண்ணைக்காடு பேரூராட்சி பகுதியில் வசித்து வருபவர் கருப்பசாமி மகன் வினோத்குமார் இவர் கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் சதீஷ்குமார் மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். வினோத் குமார் சதீஷ் முத்துக்குமார் ஆகிய மூவரும் நண்பர்களாக இருந்துள்ளனர் மூவரும் மது அருந்தி உள்ளனர் இதில். மூவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதில் சதீஷ்குமார் மற்றும் முத்துக்குமாரின் தாயாரை வினோத்குமார் என்பவர் தரைகுறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சதீஷ்குமார் மற்றும் முத்துக்குமார் . வினோத் குமாரின் வீட்டுக்கு சென்று தங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினேத்குமாரை குத்தியதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக வினோத் குமாரை பண்ணைக்காடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கு சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வினோத் குமார் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தாண்டிக்குடி போலீசார் விசாரணை செய்து சதீஷ்குமார் மற்றும் முத்துக்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.