இருசக்கர வாகனம் திருடும் பரபரப்பு சிசிடிவி காட்சி
திண்டுக்கல் நகர் பகுதியில் தொடர்ச்சியாக திருடு போகும் இரு சக்கர வாகனங்கள் இருசக்கர வாகனம் திருடும் பரபரப்பு சிசிடிவி காட்சி;
திண்டுக்கல் நகர் பகுதிகளில் தொடர்ச்சியாக இரு சக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக மக்கள் கூடும் இடங்களான டீக்கடைகள், மருத்துவமனைகள் மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரு சக்கர வாகனங்களை பறிகொடுத்த நபர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். தற்போது திண்டுக்கல் நாகல்நகர், துளசி ஹோட்டல் அருகே மர்ம நபர்கள் TVS-XL வண்டி திருடி செல்லும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது