கோவை: குப்பை வாகன ஓட்டுனர்கள் போராட்டம் !
சுடுகாட்டில் வாகன நிறுத்த உத்தரவு — ஓட்டுனர்கள் கண்டனம், போராட்ட எச்சரிக்கை.;
கோவை மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் குப்பை வாகன ஓட்டுனர்கள், சுடுகாட்டில் வாகனங்களை நிறுத்துமாறு அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக குற்றம் சாட்டி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பணியாற்றும் ஓட்டுனர்கள், இதனை எதிர்த்து ஆட்சேபணை தெரிவித்த நான்கு பேரை எந்த முன்னறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்ததாக கூறினர். மேலும், இ.எஸ்.ஐ., பி.எப். தொகைகள் சரியாக செலுத்தப்படவில்லை என்றும், தீண்டாமை மனப்பான்மையுடன் அதிகாரிகள் நடந்துகொள்வதாகவும், அதற்கெதிராக எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். சுடுகாட்டில் வாகனங்களை நிறுத்தும் உத்தரவை வாபஸ் பெறாவிட்டால், தொடர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஓட்டுனர்கள் எச்சரித்துள்ளனர்.