கரூர் துயர சம்பவம்- சிபிஐ தரப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை கரூர் நீதிமன்றத்தில் தாக்கல்.

கரூர் துயர சம்பவம்- சிபிஐ தரப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை கரூர் நீதிமன்றத்தில் தாக்கல்.;

Update: 2025-10-23 10:51 GMT
கரூர் துயர சம்பவம்- சிபிஐ தரப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை கரூர் நீதிமன்றத்தில் தாக்கல். கடந்த மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூருக்கு பிரச்சாரம் மேற்கொள்ள வந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. இதே போல சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் மற்றொரு ஆணையத்தை அமைத்தது. இந்த இரண்டு விசாரணை அமைப்புகளும் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூருக்கு வருகை தந்த சிபிஐ அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளனர்.

Similar News