கோவை தெற்கு மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்கள் நிறைவு !

சூலூர், கிணத்துக்கடவு தொகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்பு.;

Update: 2025-10-24 05:29 GMT
முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்கள், கோவை தெற்கு மாவட்டத்தின் சூலூர் மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிகளில் சிறப்பாக நிறைவு பெற்றன. சூலூர் பேரூராட்சிக்குட்பட்ட 10 முதல் 18-ஆம் வார்டுகள் வரை நடைபெற்ற முகாம், சூலூர் எஸ்.ஆர்.எஸ் திருமண மண்டபத்தில் நடந்தது. திருமலையாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 10 முதல் 15-ஆம் வார்டுகளுக்கான முகாம், ஆண்டவர் நகர் செம்பகாளியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாம்களை கோவை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் துவக்கி வைத்து, பயனாளிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர்கள், கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு தகவல் வழங்கி, நேரடியாக விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்ட இம்முகாம்களில் பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Similar News