அ.தி.மு.க ஒன்றிணைவு குறித்து பத்து நாள் கெடு இல்லை, ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டன - செங்கோட்டையன் !
விரைவில் நல்லதே நடக்கும் – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.;
அ.தி.மு.க ஒன்றிணைவு குறித்து பத்து நாள் கெடு விதிக்கவில்லை, ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டன என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது, “அ.தி.மு.க ஒன்றிணைப்பு விரைவில் நல்ல முறையில் நடைபெறும்” என்றார். திருமண நிகழ்ச்சியில் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுமா என கேள்வி எழுப்பியபோது, “இதுவரை அதுபோன்றது இல்லை, நல்லதே நடக்கும்” என பதிலளித்தார். பத்து நாள் கெடு விதித்தீர்களா என்ற கேள்விக்கு, “நான் பத்து நாள் கெடு சொல்லவில்லை; பத்து நாட்களில் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும், ஒரு மாதத்திலோ ஒன்றரை மாதத்திலோ முடிவு வர வேண்டும் என்றேன். ஆனால் ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டன” என கூறினார். கட்சி ஒழுக்கம் குறைந்துவிட்டதா என்ற கேள்விக்கு, “அது உங்கள் கருத்து” என செங்கோட்டையன் பதிலளித்து புறப்பட்டார்.