கோவை: ஓரினச்சேர்க்கை பிரச்னையில் நண்பர் கொலை - ஆயுள் தண்டனை
ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததை காரணமாக நண்பரை கல்லால் தாக்கி கொலை செய்த தொழிலாளிக்கு கோவை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.;
ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததன் காரணமாக நண்பரை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் குற்றவாளி பிரகாசுக்கு கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தது. இடிகரை செங்கோலிபாளையத்தை சேர்ந்த சண்முகம் (48) மற்றும் சாய்பாபா காலனியை சேர்ந்த பிரகாஷ் (40) இருவரும் காய்கறி மார்க்கெட்டில் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். 2022 ஜனவரி 18-ஆம் தேதி சண்முகம், பிரகாஷை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில், பிரகாஷ் கல்லால் தாக்கி சண்முகத்தை கொலை செய்தார். சாய்பாபா காலனி போலீசார் பிரகாசை கைது செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சசிரேகா நேற்று தீர்ப்பு வழங்கினார்.