வாலாங்குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் – சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி
வாலாங்குளத்தில் கழிவுநீர் கலப்பால் மீன்கள் உயிரிழப்பு – ஆய்வு கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.;
கோவை உக்கடம் அருகே உள்ள வாலாங்குளத்தில் கழிவுநீர் கலப்பு மற்றும் ஆகாயத்தாமரை பரவல் தொடர்ந்து பிரச்சனையாக உள்ளது. நேற்று சுங்கம் புறவழிச் சாலை அருகே குளத்தில் பல மீன்கள் செத்து மிதந்தன. இது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வாலாங்குளத்தில் கழிவுநீர் கலப்பால் மீன்கள் உயிரிழந்துள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் உடனடி ஆய்வு செய்து, கழிவுநீர் கலப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குளத்தில் உள்ள மீன்கள் உணவிற்கு தகுதியானவையா என்பதைப் பரிசோதிக்கவும் வேண்டும் எனக் கூறினர்.