வாலிபர் கொலை வழக்கு : சத்தீஸ்கர் நபருக்கு ஆயுள் சிறை தண்டனை !
சத்தீஸ்கர் நபருக்கு ஆயுள் சிறை : கோவை நீதிமன்றம் தீர்ப்பு.;
கோவை செட்டிபாளையம் பகுதியில் 2024ஆம் ஆண்டு ராகேஷ் குமார் (20) என்பவரை கொலை செய்த வழக்கில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுதன் தண்டி (25)க்கு கோவை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்து, சாட்சிகளை ஆஜர்படுத்திய பெண் தலைமை காவலர் அனந்த செல்வக்கனி மற்றும் விசாரணை அதிகாரியை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டினார்.