கோவை சிறுவாணி சாலையில் பயங்கர விபத்து : நான்கு பேர் உயிரிழப்பு !

கட்டுப்பாட்டை இழந்த கார் புளியமரத்தில் மோதி நான்கு பேர் பலி .;

Update: 2025-10-25 04:08 GMT
கோவை சிறுவாணி சாலையில் டாட்டா அல்ட்ராஸ் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தில் மோதியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பேரூர் அருகே செட்டிபாளையம் எச்.பி. பெட்ரோல் பங்க் அருகே நடந்த இவ்விபத்தில் உயிரிழந்தவர்களில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஷ் மற்றும் பிரகாஷ் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் பேரூரில் உள்ள கனகஸ்ரீ வாட்டர் வாஷ் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மற்ற இரண்டு உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்த நபர் குறித்து காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Similar News