கோவை: ஆம்புலன்சிலேயே வடமாநில பெண்ணுக்கு பிரசவம் !

கோவையை நெருங்கும் போது ஆம்புலன்சிலேயே சுகப்பிரசவம்.;

Update: 2025-10-25 10:39 GMT
அன்னூர் அருகே கணேசபுரத்தை சேர்ந்த அசாம் மாநில தம்பதிகள் சைனா குமார் – அஞ்சலிகுமாரி (28). கர்ப்பமாக இருந்த அஞ்சலிகுமாரி அன்னூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்குச் சென்றபோது, எந்த தடுப்பூசியும் எடுக்காதது தெரியவந்தது. இதையடுத்து அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். செவிலியர் பார்வதி, அவசரகால தொழில்நுட்ப உதவியாளர் தனபால், பைலட் ஆனந்தகுமார் ஆகியோர் உடன் சென்ற ஆம்புலன்ஸ் கோவையை நெருங்கும்போது, அஞ்சலிகுமாரிக்கு நேற்று பிரசவவலி ஏற்பட்டது. உடனே ஆம்புலன்சிலேயே சுகப்பிரசவமாக பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது குழந்தையின் தலையை தொப்புள் கொடி சுற்றியிருந்தும், மருத்துவக் குழுவின் விரைவான செயல்பாட்டால் தாய், குழந்தை இருவரும் நலமாக உள்ளனர்.

Similar News