இ சேவை மையத்தில் முறையான சேவையை இல்லாமல் அலைக்கழிக்கப்படும் மக்கள்
கொடைக்கானலில் அமைந்துள்ள இ சேவை மையத்தில் முறையான சேவையை இல்லாமல் அலைக்கழிக்கப்படும் மக்கள்;
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆதார் கார்டு மிக முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது பள்ளி முதல் கல்லூரி, அலுவலகம் மற்றும் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்வது வரை ஆதார் கார்டு முக்கிய பங்காக இருந்து வருகிறது இந்நிலையில் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளுக்கு ஆதார் கார்டு பதிவு செய்ய வேண்டும் என்றால் கொடைக்கானல் தாலுகா அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டுள்ள இ சேவை மையத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும் இந்நிலையில் இ சேவை மையத்தில் பணிபுரிபவர்கள் முன்னறிவிப்பு இன்றி அவ்வப்போது விடுமுறை விடுவதும் இணையதளம் வேலை செய்யவில்லை என்றும் ஆதார் கார்டு திருத்தம் செய்ய வரும் பொது மக்களை அழக்களிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது, மேலும் பள்ளி குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பிழை திருத்தம் செய்வதற்கு ஒரு மாதத்திற்கு மேலாக காலம் எடுத்துக் கொள்வதாக குற்றம் சாட்டுகின்றனர், மேலும் மேல் மலை மற்றும் கீழ் மலை கிராமங்களில் இருந்து வரும் கிராம மக்கள் போதிய பேருந்து இல்லாததால் வாடகை வாகனத்தில் 2000 ரூபாய் செலவு செய்து இ சேவை மையம் வருவதாகவும் தங்களுடைய பணம் வீணாகுவதாகவும் தெரிவிக்கின்றனர் எனவே தமிழக அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு மேல் மலை மற்றும் கீழ் மலை கிராம பகுதிகளில் இ சேவை மையம் அமைக்க வேண்டும் கொடைக்கானல் பகுதியில் அமைந்திருக்கும் இ சேவை மையத்தில் பணிபுரியும் பணியாளர்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது.