புவிசார் தகவல் தொழில்நுட்ப துறையின் சார்பில் கருத்தரங்கு

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் புவிசார் தகவல் தொழில்நுட்ப துறையின் சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது;

Update: 2025-10-26 05:45 GMT
திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் புவிசார் தகவல் தொழில்நுட்ப துறையின் சார்பில் ஜியோபார்லே -2025 கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 12 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர். புவிசார் குறித்து ஓவியப்போட்டி, புதையல் வேட்டை, வினாடி வினா, புகைப்படப் போட்டி மற்றும் ஆய்வு கட்டுரை விவரிப்பு உள்ளிட்ட போட்டிகள் இளநிலை மற்றும் முதுநிலை என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டன. இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு தனித்தனியாக நடைபெற்ற போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை பல்கலைக் கழக துணைவேந்தர் பஞ்சநதம் வழங்கினார். போட்டியில் புள்ளிகளின் அடிப்படையில் முதுநிலை பிரிவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மும், இளநிலை பிரிவில் உதகமண்டலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் முதலிடம் பெற்றன.

Similar News