முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா முளைப்பாரி எடுத்த பெண்கள்

நிலக்கோட்டை சேகரன் மஹாலில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முளைப்பாரி எடுத்து வந்து மரியாதை செலுத்திய பெண்கள்;

Update: 2025-10-26 12:08 GMT
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் சமூக கூட்டமைப்பு சார்பில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்த விழாவில் திண்டுக்கல், தேனி மதுரை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்று முளைப்பாரி எடுத்து வந்தனர் முன்னதாக கும்மியடித்து, குலவையிட்டு முத்துராமலிங்க தேவர் புகழ் பாடிய பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் தனியார் அரங்கில் வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்கத் தேவர் உருவ சிலை முன்பு முளைப்பாரிகளை வைத்து மரியாதை செலுத்தினர்.

Similar News