மட்டப்பாறையில் தொடங்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
நிலக்கோட்டை அருகே மட்டப்பாறையில் மழைக்காலம் நீடித்து வருவதால் முன்னதாக தொடங்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்;
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி மட்டப்பாறை ராமராஜபுரம் ஆகிய பகுதிகளில் வைகை பாசன தண்ணீரை அடிப்படையாகக் கொண்டு 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது இந்நிலையில் இந்த நெல் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது இந்நிலையில் தொடர்ந்து மழை காலம் நீடித்து வருவதால் விவசாயிகளின் நலன் கருதி முழுமையான அறுவடை பணிகளுக்கு முன்னதாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன கடந்த காலங்களில் மூன்று நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அரை கிலோமீட்டர் இடைவெளியில் ஒரு நெல் கொள்முதல் நிலையம் என்ற அடிப்படையில் 7 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன இது இப்பகுதி விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இருப்பினும் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாள்தோறும் செயல்பட வேண்டும் என்றும், இடைத்தரர்கள் செயல்பாட்டை தடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.