வாட்டர் கம்பெனியில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல் அருகே வாட்டர் கம்பெனியில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை;
திண்டுக்கல் அருகே பாலமரத்துப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வாட்டர் கம்பெனி ஸ்டோர் ரூமில் அங்கு வேலை பார்த்த வடமதுரை, புத்தூர், AD-காலனியை சேர்ந்த மாரியப்பன் மகன் வீராச்சாமி(20) என்பவர் மோட்டார் வயரால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் வீராச்சாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.