வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் மனு
வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்;
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலுவத்தூர் கிராமத்தை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான பட்டதாரியான சிவசங்கரி மற்றும் சிவசங்கரியின் தம்பி மாற்றுத்திறனாளியான வாய் பேச முடியாத அசோக்குமார் ஆகியோர் குடும்பத்துடன் மனு அளித்தனர் அந்த மனுவில் பட்டதாரியான சிவசங்கரியின் கணவர் இறந்து 4 வருடங்கள் ஆகி உள்ள நிலையில் வாழ்வாதாரத்திற்கு மிகவும கஷ்டப்படுவதால் அரசு வேலை வேண்டும் என்று 50-க்கும் மேற்பட்ட மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மாற்றுத்திறனாளியான வாய் பேச முடியாத சிவக்குமார் திருமண உதவித் தொகை கேட்டும் 50-க்கும் மேற்பட்ட தடவைக்கு மேல் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை ஆகவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.