பேகம்பூர் நத்தர்ஷா தெருவில் வார்டு சபை கூட்டம் நடைபெற்றது
திண்டுக்கல் அருகே பேகம்பூர் நத்தர்ஷா தெருவில் வார்டு சபை கூட்டம் நடைபெற்றது;
திண்டுக்கல் மாநகராட்சியில் இன்றும் வருகிற 29ஆம் தேதி புதன்கிழமை ஆகிய நாட்களில் வார்டு சிறப்பு கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 39 ஆவது வார்டுக்குட்பட்ட பேகம்பூர் நத்தர்ஷா தெருவில் 39 வது வார்டு செயலாளர் அசன் முகமது முன்னிலையில் முப்பத்தி ஒன்பதாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பிலால் உசேன் தலைமையில் வார்டு சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 39 வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு அவர்களது பகுதியில் உள்ள குறைகளான சாக்கடை பிரச்சனை குப்பை பிரச்சினை குடிநீர் பிரச்சனை மழைக்காலங்களில் கழிவு நீர் வீட்டிற்குள் வராமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் இலவச வீட்டு மனை பட்டா கேட்டும் உள்ளிட்ட பல்வேறு குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். பொதுமக்கள் கூறிய குறைகளை எழுதிக் கொண்ட அதிகாரி இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுத்து சரி செய்யப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்வில் அம்ஜா, ஆசிக் மௌலானா, நிஜாம், தர்மர், நசீர், ரிஜ்வான், வைகை தாஜ், காசிம், அஜ்மல், முஸ்தாக், ஃபயாஸ், ராஜா, அமீர், இஸ்மாயில் ஆட்டோ இஸ்மாயில், ரபீக், இப்ராஹிம், பரக்கத் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் ஷேக் பதில் மாவட்ட செயலாளர் யாசர் அரஃபாத் மற்றும் வார்டு பொதுமக்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.