மர்ம நபர்களால் இளம் பெண் வெட்டி படுகொலை
திண்டுக்கல் அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இளம் பெண் வெட்டி படுகொலை போலீசார் விசாரணை;
திண்டுக்கல் அருகே உள்ள சீலப்பாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகள் மீனாட்சி (வயது 25). இவர் சீலப்பாடியில் உள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று 27.10.25 மாலை திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில் உள்ள செல்லமந்தாடி அருகே உள்ள காட்டுப் பகுதியில் மீனாட்சி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் முகம் மட்டும் தலையில் வெட்டுப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து மீனாட்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீனாட்சி எதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றார் யாருடன் சென்றார், காதல் விவகாரமா அல்லது உறவுக்கு மீறிய விவகாரமா யார் படுகொலை செய்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.