நதிக்குடி கிராமத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வருவாய் துறை அலுவலர்களை சாத்தூர் எம்.எல்.ஏ கண்டித்ததால் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவல
நதிக்குடி கிராமத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வருவாய் துறை அலுவலர்களை சாத்தூர் எம்.எல்.ஏ கண்டித்ததால் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்*;
விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை அருகே நதிக்குடி கிராமத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வருவாய் துறை அலுவலர்களை சாத்தூர் எம்.எல்.ஏ கண்டித்ததால் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை அருகே உள்ள நதிக்குடி கிராமத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த முகாமை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரகுராமன் ஆய்வு செய்து உள்ளார். அப்போது உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு அந்த பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி நபரும் அவருடைய அம்மாவும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அப்போது அங்கு பணியில் இருந்த வருவாய்த்துறை ஊழியர்கள் மாற்றுத்திறனாளியின் தாயாரிடம் முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் முகாமை பார்வை யிட சென்ற சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மாற்றுத்திறனாளியின் தாயாரிடம் முறையாக பதிலளிக்காத வருவாய்த்துறை ஊழியர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் செயலை கண்டித்து உங்களுடன் ஸ்டாலின் முகாமை வருவாய்த்துறை ஊழியர்கள் புறக்கணித்தனர். இதனால் முகாமிற்கு வரும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். மேலும் வெம்பக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர் வடிவேல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை அலுவலகம் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது எடுத்து வருவாய்த்துறை அலுவலர் கள் மீண்டும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பணிக்கு சென்றனர்.