மீண்டும் உளறிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
வத்தலகுண்டுவில் பாஜக சார்பில், தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம். பரப்புரையில், குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியை, உத்திரப்பிரதேச முதலமைச்சராக இருந்தார் என, உளறிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்;
வத்தலகுண்டுவில் பாஜக சார்பில், நடைபெற்ற தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம். பரப்புரையில், கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், குஜராத் முதலமைச்சராக இருந்த, நரேந்திர மோடியை, உத்திரப்பிரதேச முதலமைச்சராக இருந்தார் என, உளறிய பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் பாஜக சார்பில், தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம் என, பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் இரா.விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். பரப்புரையின் போது, பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், குஜராத் முதலமைச்சர் ஆக மூன்று முறை நரேந்திர மோடி இருந்தார் என்று கூறுவதற்கு பதிலாக, உத்தர பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்து இந்தியாவில் மூன்றாவது முறை பிரதமராக வந்துள்ளார் என, உளறல் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.